கிரேக்க சைப்ரஸின் லர்னகா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப்புகழ்மிக்கஹலா ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலை முழுநேரத்தொழுகைகளுக்காகத்திறந்துவிடுமாறு கோரி சைப்ரஸின் தலைமை முப்தி அந்நாட்டு ஜனாதிபதியிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சைப்ரஸ் ஜனாதிபதி டெமஸ்ரிஸ் கிரிஸ்டோபியுடன் நடைபெற்ற
சந்திப்பின் போதே சைப்ரஸின் தலைமை இமாம் ஹலா ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலை சுதந்திரமாகத்திறந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.சைப்ரஸில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குப்பற்றிபேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் மீண்டும் உடன்பட்டுள்ளதாகவும்,இரு சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம்எனவும் சைப்ரஸின் தலைமை முப்தி இமாம் சாகிர் அலேமதர் ஜனாதிபதியுடன்
நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தெரிவித்தார்.
சைப்ரஸின் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் 140க்கும் அதிகமான பள்ளிவாசல்கள்காணப்படுவதுடன்,அவற்றில் 8பள்ளிவாசல்களே மக்களின் பாவனையில் உள்ளது என இமாம் சாகிர் அலேமதர் குறிப்பிட்டார்.ஹலா ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலில்
ஒவ்வொருநாளும் காலை 8.00மணி முதல் மலை 5.00மணி வரையே
திறந்திருக்கப்பட்டிருப்பதுடன்,அடுத்த நேரங்களில் பள்ளிவாசலை திறப்பதற்குஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் விசேட அனுமதி பெறவேண்டியுள்ளதுஎன்பதை இமாம் சாகிர் அலேமதர் தெரிவித்தார். இதற்கு உதாரணமாகரமழான் காலங்களில் இரவுவேளைத் தொழுகைகளை சுட்டிக்காட்டினார்.எமதுபள்ளிவாசலில் சுதந்திரமாகத் தொழுவதற்கு நாம் ஏன் அரசாங்கத்திடம்அனுமதி பெறவேண்டும் என இமாம் சாகிர் அலேமதர் கேள்வி எழுப்பினார்.
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உஸ்மானிய கிலாபத்தின் நிர்வாகத்தில் சைப்ரஸ் இருந்த காலத்தில் ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன்,1817ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்இப்பள்ளிவாசல் முற்றாகக் கட்டிமுடிக்கப்பட்டது. அழகான குப்பாகளையும்,மினாராவையும் கொண்டுள்ள இப்பள்ளிவாசலானது உஸ்மானிய பேரரசின்
கலையம்சங்களைக் கொண்டுள்ளது.இப்பள்ளிவாசலலைத் தரிசிப்பதற்காகவருடந்தோறும் பலர் வருகை தருகின்றனர்.மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம்,மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி,பலஸ்தீனின் அல் அக்ஸா ஆகிய பள்ளிவாசல்களுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்நத பள்ளிவாசலாக ஸூல்தான் டெக்கே பள்ளிவாசல் மதிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments