இந்தோனேசிய உலமாக்கள் காதலர் தினத்தை தடைசெய்துள்ளனர்.






இந்தோனேசியாவின் அஸிச் மாகணத்தில் உள்ள முஸ்லிம் அறிஞர்கள்
காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு எதிரான கடுமையான முடிவை எடுத்துள்ளனர்.காதலர்தினக் கொண்டாட்டமானது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும்,ஷரீஆவுக்கும் அச்சுறுத்தலான செயலாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.காதலர் தினத்தை அனுசரிப்பது ஹராமாகும்,ஏனெனில் இது இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணானதாகும் 
என அஸிச்உலமா சங்கத்தின் பொதுச்செயலாளர் டிக் பைஸல் அவர்கள் செய்திநிறுவனமொன்றுக்கு தெரிவித்தார்.முஸ்லிம்கள் தமது அன்பை வாழ்நாள் முழுதும் வெளிப்படுத்தவேண்டும் மற்றும் அதற்காக குறித்தநாளை அல்லது நிகழ்வை ஏற்படுத்துவது தவறில்லை. எனினும் முஸ்லிம் இளைஞர் தலைமுறையினர் இவ்வாறான வெளிநாட்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கக் கூடாது என அஸிச்உலமா சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.


காதலர் தினமானது பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி உலகின் பலநாடுகளில் கொண்டாடப்படுகின்றது.மேற்கத்தைய நாடுகளில் இது பாரம்பரிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது.மக்களிடடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சந்தோசமான நிகழ்வுகளுக்கு இஸ்லாம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேற்கு நாடுகளில் கண்மூடித்தனமாக பின்பற்றப்படும் காதலர்தினம் போன்ற நிகழ்வுகளை இஸ்லாம் எதிர்க்கின்றது. எனவே காதலர்தினத்தை நினைவுகூர்வது பித்அத் ஆவதுடன் இதற்கு இஸ்லாம் எவ்விதமான ஆதரவையும் வழங்கியதில்லை.இவ்விடயத்தில் அரசாங்கமும் இளைஞர்களை வழிநடத்தும் பெற்றோர்களும் 
இஸ்லாமிய போதனைகளை கடைபிடிக்கும் நடவடிக்கையில் இளைஞர்களை ஈடுபடத்தவேண்டும் எனவும் அஸிச் முஸ்லிம் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. சரியான நேரத்தில் நல்ல பதிவு .
    http://www.islamiyaarangam.blogspot.in

    ReplyDelete