சுவிஸர்லாந்தின் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றினைந்து பாராளுமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளது.






சுவிஸர்லாந்து முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரக்கூடியவிசாலான முஸ்லிம் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அந்நாட்டின் பிரதான இரண்டு பெரும் முஸ்லிம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. உம்மா சுவிஸர்லாந் என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள இவ்அமைப்பானது 2013ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஆரம்பிக்கபடுமென தெரிவிக்கப்படுகின்றது. உட்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் இஸ்லாமிய மதக்கல்வி என்பன சுவிஸர்லாந்து முஸ்லம்கள் முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினைகளாக காணப்படுகின்றது.அந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக சுவிஸர்லாந்தின் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றினைந்து வாக்கெடுப்பொன்றை நடத்தி சுவிஸர்லாந்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.  உம்மா என்ற அரேபிய சொல்லின் கருத்தானது முஸ்லிம் சமூகம் என்பதாகும்.அமைப்பின் அடிப்படை அம்சங்கள் இவ்வருடத்தின்நடுப்பகுதியில் தயாராக இருக்கும் என சுவிஸர்லாந்து இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பர்ஹத் அப்ஸர் தெரிவித்துள்ளார்.வாக்கெடுப்பானது இவ்வருட இறுதிப் பகுதியில் பேசல்நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுவிஸர்லாந்து இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழு மற்றும் அதன் துணை அமைப்பான சுவிஸர்லாந்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிறுவனம் என்பன சிறிய நிலப்பகுதியில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் பேசல் மாவட்டத்தை வாக்கெடுப்பு நடாத்துவதற்கு தெரிவுசெய்துள்ளதாக பர்ஹத் அப்ஸர் மேலும் தெரிவித்தார்.இச்செயற்பாடுகள் சரியான
முறையில் நடைபெற்றால் அடுத்தவருட குளிர்காலத்தில் சுவிசர்லாந்து முஸ்லிம்கள் இடையே சிறந்த தேர்தல் ஒன்று நடத்தப்படுமென சுவிஸர்லாந்து இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழுவின் தலமையதிகாரி கூறினார்.


உம்மா சுவிஸர்லாந்து அமைப்பு வெற்றிகரமாக அமையப்பெற்றால், சுவிஸர்லாந்தில்வாழும் ஏறத்தாள நான்கு இலட்சம் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரே வார்தையில் சுவிஸர்லாந்து அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள்களை முன்வைக்க முடியுமாகவிருப்பதுடன், வாக்கெடுப்பின் போது பரிந்துரை செய்யவும்முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவிஸர்லாந்தில் ஏறத்தாள 400,000முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.இது நாட்டின் மொத்தசனத்தெகையில் 5சதவீதமாகும். கோஸோவோ,துருக்கி மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இடம்பெயாந்த அதிகமானமுஸ்லிம்கள் சுவிஸர்லாந்தில் வாழ்கின்றனர்.







Post a Comment

1 Comments