ஜெர்மனின் பெர்லின் நகரின் பெரிய பள்ளிவாசல் மீது இனவாதிகள் தாக்குதல்.








ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள பெரியபள்ளிவாசல்
இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.பெர்லின்
நகரின் பெரிய பள்ளிவாசலான செய்திக் பள்ளிவாசல் மீது 
இனந்தெரியாதாவர்கள் சனிக்கிழமை பல வர்ணகுண்டுகளை 
எறிந்துள்ளனர்.மேலும் அவர்கள் இஸ்லாத்தை அவமதிக்கும் 
இஸ்லாத்துக்கு எதிரான படங்களையும் பள்ளிவாசல் கட்டடத்தின்
நுழைவாயில் வைத்துள்ளனர்.அண்மையில் செய்திக் பள்ளிவாசலுக்கு
அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தாக ஜெர்மன் பொலீஸார்
தெரிவித்துள்ளனர்.கடந்த மூன்று வருடங்களில் செய்திக் பள்ளிவாசல்
நான்கு தடவைகள் எரிதாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.




ஜெர்மனின் முஸ்லிம் தலைவர்களுக்கு இத்தாக்குதலை வன்மையாக
கண்டித்துள்ளதுடன்,நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும்
இஸ்லாமிய நிலையங்கள் மீதும் பாதுகாப்பு நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.ஜெர்மனின் வலதுசாரிஅரசாங்கத்தின் வேந்தர் அஞ்சலா மேர்கல,ஜெர்மனில்
இஸ்லாத்தின் மீதான அச்சத்துக்கு குரல்கொடுப்பதன் மூலம் 
முஸ்லிம்களை குற்றவாளிகளாக இணங்காட்டுவதற்கு முயற்சிப்பதாக
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளர்.மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸூக்கு
அடுத்தடியாக அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடாக ஜெர்மனி 
விளங்குகிறது.இங்கு ஏறத்தாள 3-3.5 மில்லியன் வரையான முஸ்லிம்கள் 
வாழ்கின்றனர்.ஜெர்மனில் இஸ்லாத்தை ஏற்கும் மக்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜெர்மனில் இஸ்லாத்தின் மீதான அச்சம் காரணமாக
அந்நாட்டு முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துவருகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

1 Comments

  1. alahamdulilah allah will increase more muslims in Germany Ameen

    ReplyDelete