வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகம்.




வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்ளியலான புனித அல்குர்ஆன் பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.கன்ஸடியால் கடந்த 12வருடங்களில் ஒவ்வொருவருடமும் புனித அல்குர்ஆனின் வெவ்வெறுபட்ட பிரதிகள் உருவாக்கப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.இப் புனித அல்குர்ஆன் வெள்ளி மற்றும் பிளட்டினம் முலாம் பூசப்பட்ட தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது 6கிலோகிராம் எடையைக் கொண்டதாகும்.மேலும் இத்தாள்கள் 21 சென்றிமீற்றர் நீளத்தையும், 15சென்றிமீற்றர் அகலத்தையும் கொண்டதுடன்,20கரட் வைரம்,10கரட் ரூபி மற்றும் நீலமாணிக்கம் அடங்களாக 2500 மாணிக்கக்கற்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.  இப் புனித குர்ஆனை உருவாக்குவதற்கு 10மாதங்கள் சென்றுள்ளதுடன்,இதன் உருவாக்கத்திற்கு 150,000திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. சித்திரக்கலை பற்றிய ஏதெனும் முறையான பயிற்சி கன்ஸடி பெறவில்லை, எனினும் சிறுவயலிருந்தே சித்திரக்கலை ஆற்றல் அவரிடம்  காணப்பட்டுள்ளது.சாதாரண வெற்றுக் கண்னுக்கு புலப்படும் எழுத்துக்களின் 20மடங்கான சிறியஅளவான எழுத்துக்களை எழுத மற்றும் வாசிக்கக்கூடிய திறமை கன்ஸடிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2மில்லிமீற்றர் நீளமும், 1.5மில்லிமீற்றர் அகலமும்  600 பக்கங்களையும் கொண்ட உலகின் மிகச்சிறிய குர்ஆனும் ரஹீன் அக்பர் கன்ஸடியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments