துருக்கிப் பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு ரமழான் நோன்பு இப்தார் விருந்துபசாரம்.




துருக்கிப் பிரதமர் ரஸிப் தையிப் எர்டோகன் ஹமாஸ் தலைவர் காலித் மசாலுக்கு புனித ரமழான் இப்தார் விருந்துபசாரம் வழங்கியுள்ளார். அங்காராவில் அமைந்துள்ள துருக்கிப் பிரதமர் வாசஸ்தலத்தில் ஹமாஸ் தலைவர் காலித் மசால் உட்பட சில ஹமாஸ் அதிகாரிகளுக்கு, செவ்வாய்க்கிழமை மாலை இப்தார் விருந்துபசாரம் வழங்கப்பட்டதாக துருக்கி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இவ் இப்தார்  விருந்துபசாரத்தில்  துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹமட் டேவோக்ல்யூ மற்றும் துருக்கி தேசிய உளவு அமைப்பின்(MIT) தலைவர் ஹகான் பிதான் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.இப்தார் விருந்துபசாரத்தின் பின்னர் இவர்களுக்கிடையில் 3மணிநேர கலந்துரையாடல் கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றி இதுவரை வெளியிடப்படவில்லை. அண்மைக்காலமாக துருக்கிக்கும், ஹமாஸூக்கும் இடையிலானஉறவு வலுவடைந்து வருகின்றது.2010ஆம் ஆண்டு காஸாவுக்கு உதவிக்காக சென்ற துருக்கிக்கப்பல் மீது இஸ்ரேலால் தாக்குதல் மேற்கொண்டது.இதனால் துருக்கிய செயற்பாட்டாளர்கள் 9பேர்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

2 Comments