இஸ்ரேலின் ஆளில்லா விமானம் காஸாவின் வடக்குப் பகுதியில் சுட்டுவீழத்தப்பட்டுள்ளது.



இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்று பலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பினால் காஸாவின்வடக்குப்பகுதியில் சுட்டுவீழ்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் எப்-16 விமானமொன்றும் ஹமாஸ் அமைப்பினால் சுட்டுவீழ்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகனையொன்று  இஸ்ரேல் கப்பலொன்றை  தாக்கியழித்துள்ளதாக பலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை,காஸாவின் இருந்து ஏவப்பட்ட ஏவனைகள் மேற்கு இஸ்ரேலின் எஸ்கோல்,
அஸ்டூட்,கர்யத் மல்காய் மற்றும் அஸ்கோன் ஆகிய நகரங்களில் வீழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பலஸ்தீனில் இருந்து ஏவப்பட்ட 774 ரொக்கட் மற்றும் ஏவகனைகில் 267 ஏவுகனைகளே ,இஸ்ரேலின் ஏவுகனை திசைதிருப்பும் இயந்திரங்களின் மூலம் இடைமறிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த புதன்கிழமை இதுவரை காஸா பகுதயின் மீது 1000 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. அண்மைக்காலாமாக காஸாவின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களின் மூலம் இதுவரை 51பலஸ்தீனர்கள்
உயிரிழந்துள்ளதுடன்,  500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில்அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

1 Comments

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,
    சகோதரர் நான் உங்கள் தளத்திற்கு உம்மத்தின் குரல் வலைதளத்தின் மூலம் உங்கள் பதிவை பார்த்து விட்டு படிக்கலாம் என்று வந்தேன்.ஆனால் உங்கள் பதிவை என்னால் படிக்கமுடியவில்லை.காரணம் உங்களுடைய பாதி பதிவை அந்த வீடியோ மறைத்து விடுகிறது.அதை சரி செய்யவும்.

    ReplyDelete