ஹிஜாப் மீதான தடையைந்தொடர்ந்து முஸ்லிம்பெற்றோர்கள் ஆரம்பப் பாடசாலை மீது வழக்குத்தாக்கல்.




லண்டனின் தென்பகுதயில் அமைந்துள்ள சென்.சைப்ரியன்ஸ் ஓர்த்தகோட்ஸ் ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு ஹிஜாப் அணிவதை தடைசெய்ததைத் தொடந்து அப்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள்,அப்பாடசலை மீது வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.மாணவர்களின் மதஉரிமை மீறப்பட்டுள்ளதன் பேரிலேயே பாடசாலை மீது வழக்கு  தொடரப்பட்டுள்ளது.கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர்,லண்டனில் அமைந்துள்ள இரண்டாம் நிலைப்பாடசலையில் தமது பாரம்பரிய மத அடையாளமான ஹிஜாபை அணிவதற்கு அனுமதிக்குமாறு குறித்தவோர் 
மாணவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெற்றியளித்தது. பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கத்தின் பாடசாலை சீருடைகள் வழிகாட்டலின் படி, வெவ்வேறுபட்ட சமயநம்பிக்கைகளைப் பின்பற்றும் மாணவர்களுக்கு அவர்களின் மதங்களை மதிக்கும் விதத்தில் அவர்களின் சீருடை அமைதலில் நியாயத்துடன் நடக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

1 Comments

  1. salam,

    good article jazakallah...

    என் தளத்தில் இன்று:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
    tvpmuslim.blogspot.com

    ReplyDelete