துருக்கி தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொடரை பார்த்து இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கப் பெண்


துருக்கியின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடரான Resurrection: Ertugrul , தொலைக்காட்சித் தொடரை பார்த்துவந்த 60வயதான அமெரிக்கப் பெண்புனித இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணியே மேற்படி புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.இவர் புனித இஸ்லாத்தை தழுவிய பின்னர் தனது பெயரை காதீஜா என்று மாற்றியுள்ளர். நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் தேடிக்கொண்டிருக்கும் போதே, Resurrection: Ertugrul என்ற தொலைக்காட்சித் தொடரை தான் கண்டதாகவும், அதன் சில எபிஸோடுகளை பார்த்ததன் பின்னர் புனித இஸ்லாத்தின் மீதுதனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் துருக்கியின் ஊடகவும் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 


இத் தொலைக்காட்சித் தொடரில்வரும் செய்க் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலந்துரையாடல் தனது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைத் தந்ததாக குறிப்பிட்ட கதீஜா அவர்கள், செய்க் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்துக்கள் தன்னை அதிகம் சிந்திக்கவும், சில வேளைகளில் அழவும் வைத்ததாக குறிப்பிட்டார். பப்டிஸ் கத்தோலிக்கராக இருக்கும் போது, தனக்கு இருந்துவந்த பல கேள்விகளுக்கு, இஸ்லாத்தின் மீது ஆர்வம் ஏற்பட்ட பின்னர் விடைகள் கிடைத்தாக கதீஜா தெரிவித்தார். Resurrection: Ertugrul அனைத்து எபிஸோடுகளை நான்கு தடவைகள் பார்த்ததாகவும், மீண்டும் ஜந்தாவது முறை அதனை தான் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கதீஜா அவர்கள் துருக்கி ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.


Resurrection: Ertugrul என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொடரானது 13ஆம் நுாற்றாண்டில் அனடோலியாவில் , உஸ்மானியப் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னர் இடம்பெற்ற கதையை சொல்கின்ற தொடராகும். இது உஸ்மானியப் பேரரசின் உருவாக்குனரான எர்துகல் காஸி அவர்களின் போராட்டத்தை விளக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடராகும் என்பது குறிப்பிடத்தக்கது. 





Post a Comment

1 Comments

  1. shaikh abu bakr ahmadh keala need to come in first line of Islamic leaders list please try to learn about him......

    ReplyDelete